நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. கிளென் பிலிப்ஸ் 34 ரன்கள் சேர்த்தார்.
இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் 65 ரன்னும், கேப்டன் ரோகித் சர்மா 55 ரன்களும் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். 17 புள்ளி 2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்து இந்திய அணி வெற்றி பெற்றது.