பிரேசிலில் நடைபெற உள்ள சா பாலோ கிராண்ட் பிரி பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதல் வரிசையில் களமிறங்கும் வாய்ப்பை மெர்சிடெஸ் அணியின் லீவிஸ் ஹாமில்டன் தட்டிச் சென்றார்.
சா பாலோ நகரில் நடைபெற்ற 3 தகுதி சுற்று போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்திய ஹாமில்டன் பந்தய தூரத்தை ஒரு நிமிடம் 8 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். ரெட் புல் அணியின் செர்ஜியோ பெரெஸ் இரண்டாம் இடத்தையும், மெர்சிடெஸ் அணியின் வால்டேரி போடாஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.