டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா உள்பட 12 பேருக்கு தயான் சந்த் கேல் ரத்னா விருதும், தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி உள்பட 35 பேருக்கு அர்ஜூனா விருதையும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வழங்குகிறார்.
மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்ஹோகைன், கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி உள்ளிட்டோருக்கு கேல் ரத்னா விருதும், கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், ஆக்கி வீரர் ஹர்மன் பிரீத், பாரா டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவானி பட்டேல் உள்ளிட்ட 35 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருதும் வழங்கப்படுகிறது.
இன்று ராஷ்டரபதி பவனில் உள்ள தர்பார் அரங்கில் நடக்கும் விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்குகிறார்.