பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
பாரீசில் நடந்த இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் டெனில் மெத்வதேவை , எதிர்கொண்ட ஜோகோவிச் 4-க்கு 6, 6-க்கு 3, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் மெத்வதேவிடம் கண்ட தோல்விக்கு, தற்போது ஜோகோவிச் பழி தீர்த்தார். இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச்சின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.
இதன் மூலம் ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலை பின்னுக்குத் தள்ளி ஜோகோவிச் புது வரலாறு படைத்தார்.