20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்தை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா ஆறுதல் வெற்றி பெற்றது.
டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக Rassie van der Dussen 94 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். 20 ஓவர்களில் 8 விக்கெட்டு இழப்புக்கு இங்கிலாந்து 179 ரன்கள் மட்டும் சேர்த்து தோல்வியை தழுவியது. கடைசி ஓவரை வீசிய ரபடா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.