டி20 உலக கோப்பையில் விளையாடி வரும் ஓமன் அணிக்கு வில்லோ வகை கிரிக்கெட் பேட்டுகளை தயாரித்து வழங்கும் பணி காஷ்மீர் தொழிற்சாலையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பசூல் கபீர் தர் என்பவருக்கு சொந்தமான விளையாட்டு உபகரணங்கள் தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்பட்ட வில்லோ வகை கிரிக்கெட் பேட்டுகளை ஓமன் அணி பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
பபுவா நியு கினியா அணிக்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற போதும் ஓமன் வீரர்கள் தங்கள் தயாரிப்பு பேட்டுகளை பயன்படுத்தியதாக கபீர் தர் தெரிவித்துள்ளார்.