உலகக் கோப்பை 20 ஓவர் வார்ம் அப் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி வீரர் ராசி வாண்டர் டசன் கடைசி இரு பந்துகளில் பவுண்டரிகள் அடித்து 101 ரன்களை எட்டியதுடன் அணியையும் வெற்றிபெறச் செய்துள்ளார்.
அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற இறுதி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் முதல் இரு பந்துகளில் டசன் ஒரு சிக்சரும் ஒரு ரன்னும் அடித்தார்.
அடுத்த இரு பந்துகளில் மில்லர் ஒரு சிக்சரும் ஒரு ரன்னும் அடித்தார். கடைசி இரு பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இரண்டையுமே பவுண்டரிக்கு விரட்டிய டசன் 101 ரன்களை எட்டினார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.