அடுத்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் சென்னை அணியில் தொடர்வேன் என கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.
வெற்றியை தொடர்ந்து பேசிய தோனி, அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் புதிதாக 2 அணிகள் அறிமுகமாக உள்ள நிலையில், பி.சி.சி.ஐ.யின் முடிவை பொறுத்து தனது ஐ.பி.எல். எதிர்காலம் அமையும் என தெரிவித்தார். சென்னை அணிக்காக விளையாடுவது என்பதை விட அணிக்கு எது சிறந்தது என பார்க்க வேண்டுமென தெரிவித்தார்.
சென்னை அணியில் நீங்கள் விட்டுச் சென்ற மரபு குறித்து பெருமைப்படுகிறீர்களா என கேள்வி எழுப்பியதற்கு, நான் இன்னும் சென்னை அணியை விட்டுச் செல்லவில்லை என சிரித்தபடியே தோனி தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று நடந்த இறுதி போட்டியையும் சேர்த்து ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில், 300 ஆட்டங்களில் கேப்டன் பொறுப்பு வகித்த ஒரே வீரர் என்ற சிறப்புக்கு கேப்டன் தோனி சொந்தக்காரர் ஆனார்.