உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் சரிதா மோர் வெண்கலப் பதக்கம் வென்ற ஆறாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
நார்வே நாட்டின் ஓஸ்லோவில் நடைபெறும் மல்யுத்தப் போட்டியில் மகளிர் 59 கிலோ எடைப் பிரிவில் ஸ்வீடனின் சாரா லிண்ட்போர்க்குடன் மோதிய சரிதா 8-2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிவாகை சூடினார்
சரிதாவுக்கு முன்பு அன்ஷூ மாலிக் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
அமெரிக்காவின் ஹெலன் மரோலிசுடன் 57 கிலோ எடைப் பிரிவில் மோதிய அவர், ஆக்ரோஷமாக ஆடிய போதும் அனுபவம் மிக்க ஹெலனிடம் 1-4 என்ற புள்ளிக்கணக்கில் தங்கப்பதக்கத்தை இழந்தார். ஆயினும் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.