ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது.
டாஸ் வென்ற டெல்லி அணி சென்னை அணியை முதலில் ஆட பணித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது.
அம்பத்தி ராயுடு 55 ரன்களும், உத்தப்பா 19 ரன்களும், டோனி 18 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய டெல்லி அணி 19.4 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் டெல்லி அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.