ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றைய 49-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் விளையாடின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் ஆடத் தொடங்கியது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது. அந்த அணி 19.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனை அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.