இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்தியா நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
முந்தைய நாள் ஸ்கோருடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோகித் சர்மா நிலைத்து நின்று ஆடி சதம் அடித்தார். தொடர்ந்து நடுக்கள வீரர் புஜாரா 61 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 92 ஓவர்களுக்கு இந்திய அணி 3 விக்கெட் இழந்து 270 ரன்கள் சேர்த்தது. கேப்டன் கோலி 22 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.