டோக்கியோ பாராலிம்பிக் தொடக்க விழாவில் ஆப்கான் கொடி மனிதாபிமான அடிப்படையில் பறக்கவிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு வீரர், வீராங்கனைகள் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து போட்டியில் கலந்து கொள்ளாத போதும் ஆப்கான் வீரர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக தொடக்க நிகழ்வில் அந்நாட்டு கொடி பறக்கவிடப்படும் என சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி தலைவர் ஆண்ட்ரூ பார்சன்ஸ் தெரிவித்துள்ளார்.