ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் அறிவித்துள்ளார்.
14வது சீசன் ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மனுமான ஜாஸ் பட்லர் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தனது மனைவிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளதால் மனைவியை கவனித்துக் கொள்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பட்லருக்கு மாற்றாக நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிளென் பிலிப்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.