விளையாட்டை நேசிக்கும் நாடு என்பதில் இருந்து, விளையாட்டில் சிறந்து விளங்கும் நாடாக மாற வேண்டும் எனக் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் விடுதலை நாளையொட்டி, சச்சின் விடுத்துள்ள செய்தியில், கொரோனா சூழலில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் இணையவழிக் கல்வி மூலம் மாணவர்கள் கல்வி பெறுவதாகத் தெரிவித்தார்.
அதே நேரத்தில் கல்வியைப் போல் விளையாட்டை மிகத் தேவையானதென்று பார்ப்பதில்லை எனக் குறிப்பிட்டார்.
விளையாட்டு என்பது உடலுக்கான செயல்பாடு மட்டுமல்லாமல் குண இயல்பு, தலைமைத்துவப் பண்பு ஆகியவற்றைக் கட்டமைப்பதற்கானது என்றும் தெரிவித்தார்.