போலந்தில் நடைபெற உள்ள செவித்திறன் குறைபாடு உடையோருக்கான பன்னாட்டுத் தடகளப் போட்டியில் குமரி மாவட்ட வீராங்கனை சமீஹா பர்வீன் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீஹா தொடுத்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, தகுதிப் பட்டியலில் எட்டாவது இடம் பிடித்ததால் போட்டிக்குச் செல்வோர் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை என விளையாட்டு ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
எட்டாவது இடம் பிடித்தாலும் பெண்கள் வரிசையில் சமீஹா பர்வீன் முதலில் உள்ளதால் அவரை அனுமதிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். சமீஹாவைப் பங்கேற்க வைத்தால் கண்டிப்பாகத் தங்கப் பதக்கம் பெற்று நாடு திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
சமீஹாவைப் போலந்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கச் செய்யவும், இது குறித்து இந்திய விளையாட்டு ஆணையத் தலைவர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கைத் திங்கட்கிழமைக்குத் தள்ளி வைத்தார்.