ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகளுக்காக விளையாடிய பஞ்சாப் வீரர்கள், வீராங்கனைகளுக்கு அமிர்தசரசில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஹாக்கிப் போட்டியில் ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. மகளிர் அணி நான்காமிடத்தைப் பிடித்தது. இரு அணிகளையும் சேர்ந்த பஞ்சாப் வீரர், வீராங்கனைகள் பொற்கோவிலில் வழிபாட்டுக்குச் சென்றபோது அவர்ளுக்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொத்துக்கள் கொடுத்து வரவேற்றார்.
வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு சிரோமணி குருத்துவாரா பிரபந்தக் கமிட்டி சார்பில் பரிசாக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. மகளிரணியினருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.