ஆஸ்திரியாவில் நடைபெற்ற ஸ்டிரியன் கிராண்ட் பிரி பைக் பந்தயத்தில் பிரமாக் அணியின் ஜார்ஜ் மார்டின் முதல் முறையாக முதலிடம் பிடித்தார். அவரை விட ஒன்றரை வினாடி தாமதமாக வந்த உலகச் சாம்பியன் ஜோன் மிர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மூன்றாவது இடத்தை யமஹா அணியின் பேபியோ பிடித்தார்.
முன்னதாக, மூன்றாவது சுற்றில் சறுக்கி விழுந்த டேனி பெட்ரோசா-வின் பைக் மீது லொரென்சோ சவடோரி-யின் பைக் மோதியது. இதையடுத்து இரண்டு பைக்குகளும் தீ பற்றி எரியத் தொடங்கியதால் அரை மணி நேரத்துக்கு போட்டி நிறுத்தப்பட்டது.