டோக்கியோ ஒலிம்பிக் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்துச் சோதனை நடத்த உள்ளதால், இந்தியாவின் மீராபாய் சானுவுக்குத் தங்கப் பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.
49 கிலோ எடைப்பிரிவில் சீனாவின் சிகுய் ஹூ சாதனையை நிகழ்த்தியதுடன் தங்கப் பதக்கம் பெற்றார். இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
இந்நிலையில் சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஊக்க மருந்து உட்கொண்டது சோதனையில் உறுதியானால் அவரிடம் இருந்து தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டு அடுத்த இடத்தில் உள்ள மீராபாய் சானுவுக்கு வழங்கப்படும்.