இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொழும்புவில் நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 50 ரன்களும், கேப்டன் ஷிகர் தவான் 46 ரன்களும் குவித்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், Charith Asalanka மட்டும் 44 ரன்கள் எடுத்தார். இதனால் 18 புள்ளி 3 ஓவர்களில் 126 ரன்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.