மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளது தெரியவந்ததால் அந்த அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கடைசி நிமிடத்தில் தள்ளி வைக்கப்பட்டது.
பிரிட்ஜ்டவுனில் நேற்றுப் போட்டியைத் தொடங்க டாஸ் போட இருந்த நிலையில் மேற்கிந்தியத் தீவு அணியில் ஒருவருக்கு கொரோனா இருந்தது கடைசி நிமிடத்தில் தெரியவந்தது.
இதையடுத்து ஆட்டம் தள்ளி வைக்கப்பட்டதால் இரு அணி வீரர்களும் பெவிலியன் திரும்பினர். முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறிப்பிடத் தக்கது.