கடுமையான கொரோனா கெடுபிடிகளுக்கு மத்தியில், ஜப்பான் ஒலிம்பிக்ஸ்-ன் முதல் போட்டி ஃபுகுஷிமாவில் (Fukushima) நடைப்பெற்றது.
ஜப்பான்-ஆஸ்திரேலியா இடையே நடந்த ஸாஃப்ட் பால் (soft ball) ஆட்டத்தில், 8-1 என்ற செட் கணக்கில் ஜப்பான் வெற்றி பெற்றது.
பார்வையாளர்கள் யாரும் இல்லாத அரங்கில், அங்கு வேலையில் இருந்த பணியாளர்கள் மட்டும் கை தட்டி வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒலிம்பிக்ஸ் தொடக்க விழா நாளை மறுநாள் டோக்கியோவில் நடக்க உள்ள நிலையில், ஸாஃப்ட் பால் போன்ற குழு விளையாட்டுகளின் முதல் சுற்றுகள் முன்கூட்டியே நடைபெறுவது வழக்கம்.