பிரிட்டிஷ் கிராண்ட்பிரி கார் பந்தயத்தில், உலக சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
சில்வர்ஸ்டோன் பகுதியில் நடைபெற்ற போட்டியை இளவரசர் எட்வர்டு உள்ளிட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் நேரில் பார்வையிட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
விறுவிறுப்பான இந்தப் பந்தயத்தின் முதல் சுற்றில் ரெட்புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் கார் மீது ஹாமில்டனின் கார் மோதியது. வெர்ஸ்டாப்பனின் கார் சேதமடைந்ததால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.
பந்தய தூரத்தை ஒரு மணி 58 நிமிடம் 23 வினாடிகளில் கடந்து ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார். இது அவரது 99வது பார்முலா ஒன் வெற்றியாகும். வெர்ஸ்டாப்பன் கார் மீது மோதியதற்காக ஹாமில்டனுக்கு 10 வினாடிகள் அபராதமாக விதிக்கப்பட்டது.