டோக்கியோ நீச்சல் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள குளத்தில் துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச டிரையத்லான் (triathlon) யூனியன் நிர்ணயித்த வரம்பை விட இரண்டு மடங்கு அதிகமாக இ-கோலீ (e coli) பாக்டீரியா அந்த விரிகுடா நீரில் காணப்பட்டதை அடுத்து, அங்கு நடைபெறவிருந்த பாரா டிரையத்லான் (Paratriathlon) போட்டி ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து தண்ணீரை சுத்தம் செய்ய 22 ஆயிரத்து 200 கன மீட்டர் மணல் கொட்டப்பட்டது. இருப்பினும் சர்வதேச விளையாட்டு அமைப்புகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நீர்நிலை தூய்மையாக இல்லை எனவும், நீர்நிலைகளில் கழிவுகள் கலந்ததால் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர்.
அசுத்தமான இந்த நீர்நிலையில் நீந்துவது விளையாட்டு வீரர்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.