இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் காயம் காரணமாக இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து அணியுடன் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள 20 பேர் கொண்ட இந்திய அணியில் சுப்மன் கில் பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் விளையாட மாட்டார் என இந்தியக் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவருக்குப் பதில் மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரில் ஒருவர் தொடக்க வீரராகக் களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.