மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான பரபரப்பான இருபது ஓவர் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கிரேனடாவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அதிக அளவாக குயின்டன் டி காக் 72 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணி 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களைக் குவித்தது.
இருபதாவது ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இறுதிப் பந்தில் அலன் சிக்சர் அடித்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 166 ரன்களே எடுத்து ஒரு ரன்னில் தோற்றது.