யூரோ கோப்பைக்கான கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டங்களில் ஸ்லோவாக்கியா, செக் குடியரசு அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் ஈ பிரிவில் நடந்த ஸ்பெயின், சுவீடன் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் களமிறங்கிய ஸ்பெயின் வீரர்கள், சுவீடன் வீரர்களுக்கு கடும் குடைச்சல் கொடுத்தனர். இரு அணி வீரர்களும் மாற்றி மாற்றி கோல் போட முயன்றும் இறுதி வரை பலனளிக்காமல் ஆட்டம் டிராவில் முடிந்தது
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகர மைதானத்தில் நடந்த ஈ பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்லோவாக்கியா அணி 2-க்கு 1 என்ற கோல் வித்தியாசத்தில் போலந்து அணியை வென்றது. ஆட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக போலந்து வீரருக்கு சிகப்பு அட்டை வழங்கப்பட்டதால் அந்த அணிக்கு கோல் வாய்ப்பு பறிபோனது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ஸ்லோவாக்கியா வீரர் பதில் கோல் திருப்பி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
மற்றொரு டி பிரிவு லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த செக் குடியரசு அணி, 2-க்கு 0 என்ற கோல் வித்தியாசத்தில் ஸ்காட்லந்து அணியை வீழ்த்தி வாகை சூடியது. அந்த அணியின் வீரர் patrik schick 42 மற்றும் 52-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் திருப்பி அணியை வெற்றி பெறச் செய்தார்.