பிரஞ்சு ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரில் இருந்து விலகுவதாக முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா அறிவித்துள்ளார்.
முதல் சுற்று ஆட்டத்தில் ரூமேனிய வீராங்கனையை வென்ற ஒசாகா செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணித்தார். போட்டி விதிகளை மீறியதாக அவருக்கு இந்திய மதிப்பில் ஏறத்தாழ 11 லட்ச ரூபாய் அபராதம் விதித்து போட்டி நடுவர் எச்சரித்தார். மேலும் இந்த பிரச்சினையை பூதாகரமாக்கிய பிரஞ்சு ஓபன் கமிட்டி, இணையதளத்தில் கருத்துகளை பதிவிட்டு வசைபாடியது. இதையடுத்து பிரஞ்சு ஓபன் தொடரில் இருந்து விலகுவதாக நவோமி ஒசாகா அறிவித்துள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் தொடரில் இருந்து தான் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், தன்னால் மற்ற வீரர்களின் கவனம் சிதற வேண்டாம் என முடிவு எடுத்துள்ளதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து நவோமி ஒசாக பூரண குணமடைய விரும்புவதாகவும், தவறுகளுக்கு வருந்துவதாகவும் பிரஞ்சு ஓபன் கமிட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.