தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ப. இனியன், ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலக கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
FIDE உலக கோப்பை செஸ் போட்டி வருகின்ற ஜூலை மாதம் 10- ம் தேதி முதல் ஆகஸ்ட் 3- ம் தேதி வரை ரஷ்யாவின் சோச்சி நகரில்நடைபெறவுள்ளது. அதில், இந்தியாவின் சார்பாக பங்கேற்கும் வீரரை தேர்வு அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பினால் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்தியாவின் முன்னணி சதுரங்க வீரர்கள் 17 பேர் இதில் பங்கேற்றனர். 16 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் தமிழக வீரர், ஈரோட்டை சார்ந்த கிராண்ட் மாஸ்டர் ப. இனியன் 12.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். இவர், கிராண்ட் மாஸ்டர்கள் B. அதிபன், S. L. நாராயணன், D. குகேஷ், விஷ்ணு பிரசன்னா உட்பட 12 வீரர்களிடம் வெற்றியும் கிராண்ட் மாஸ்டர் சேதுராமனிடம் டிரா செய்தும் 12.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்ததன் மூலம் உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டார்
தேர்வு பெற்ற இனியனுக்கு அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் செயலாளர், தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் பொது செயலாளர், பயிற்சியாளர் விஸ்வேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.