கிரிக்கெட் தொடருக்காக இலங்கை செல்லும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அவரோடு தேசிய கிரிக்கெட் அகாடமியின் உதவிப் பணியாளர்கள் சிலரும் செல்லலாம் எனத் தெரிகிறது. திராவிட் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் கிரிக்கெட் நடவடிக்கைகளுக்கான இயக்குநராக உள்ளார்.
இந்திய அணி 3 ஒருநாள் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக வருகிற ஜூலையில் இலங்கை செல்கிறது.