ஐபிஎல்லில் கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், அந்த அணிக்கும் பெங்களூர் அணிக்கும் இடையே இன்று நடக்க இருந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அகமதாபாத்தில் இன்று கொல்கத்தா, பெங்களூர் அணிகள் இடையிலான ஆட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் கொல்கத்தா அணி வீரர்களில் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டது.
இதனால் இன்று நடைபெற இருந்த ஆட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக இந்தியக் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.