மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் நடந்த வில்வித்தை உலக கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 3 தங்கம், ஒரு வெண்கலம் வென்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்டு வரும் வில்வித்தை உலக கோப்பை போட்டியில் 8 நாடுகள் கலந்து கொண்டு விளையாடிய நிலையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன் கலப்பு இரட்டை சாம்பியன் இந்தியாவின் அதானு தாஸ் தங்கம் வென்றார்.
அதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காமன்வெல்த் தங்க மங்கை தீபிகா குமாரி ((Deepika Kumari)) தங்க பதக்கம் வென்றார்.
பெண்கள் அணிகள் பிரிவில் இந்திய வீர மங்கைகள் அங்கீதா பகத் (Ankita Bhakat), தீபிகா குமாரி (Deepika Kumari), கோமலிகா பரி (Komalika Bari) தங்கம் வென்று சாதனை படைத்தனர்.