ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 46 ரன்கள் சேர்த்தார்.
தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் ராஜஸ்தான் பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு விரட்டினர். கேப்டன் விராட் கோலி 72 ரன்களும் தேவ்தத் படிக்கல் 101 ரன்களும் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 16 புள்ளி 3 ஓவர்களில் 181 ரன்கள் குவித்து பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.