ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துகளை வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காகச் சென்னை அணித் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியில் 20 ஓவர் கொண்ட ஒரு இன்னிங்சை 90 நிமிடங்களில் முடிக்க வேண்டும் என்பது விதியாகும். ஒரு மணி நேரத்துக்கு 14 ஓவர்கள் பந்து வீசினால்தான் குறிப்பிட்ட நேரத்துக்குள் இன்னிங்ஸ் முடிவடையும்.
இந்நிலையில் மும்பையில் நேற்று டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டது. இதற்காக அணித் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.