14-வது ஐ.பி.எல். கிர்க்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், மற்றும் பெங்களூர் ஆகிய மைதானங்களில் போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்து உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீசை நடத்துகின்றனர். நீண்ட இழுபறிக்கு பின்னர் ஐ.பி.எல். போட்டிகள் திட்டமிட்டபடி தொடங்கும் என பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்ததை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டும் மைதானத்தில் ரசிகர்கள் இன்றி நடத்தப்படும் என்றும் வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.