வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் நடனமாடும் வீடியோவை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
ஐ.பி.எல். தொடர் தொடங்க உள்ள நிலையில் ஒவ்வொரு அணி வீரர்களும் கொரோனா சுய தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டனர். இந்த நிலையில் தனிமைப்படுத்துதல் படலத்தை முடித்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் உற்சாகமாக நடனமாடி கொண்டாடினார்.
பாப் பாடகர் மைக்கெல் ஜாக்சனின் பிரபல பாடலுக்கு மூன் வாக் நடனமாடும் கெயிலின் வீடியோ தற்போது நெட்டிசன்களின் இஷ்டமான வீடியோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறது.