கொரோனாவில் இருந்து தப்பிக்க ஐ.பி.எல். வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதுதான் ஒரே வழி என்று கிரிக்கெட் வாரியத் துணைத்தலைவர் ராஜீவ்சுக்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார். கொரோனா வைரஸ் பரவல் எப்போது முடிவுக்கு வரும் என்று யாருக்கும் தெரியாது என்ற அவர் அதற்கு காலக்கெடுவும் வழங்க முடியாது என்றார்.
கொரோனா அச்சத்தை வைத்துக் கொண்டு வீரர்கள் சுதந்திரமாக விளையாட முடியாது என்று அவர் கூறினார். ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சக்கத்துடன் பேசி கிரிக்கெட் வாரியம் விரைவில் முடிவு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.