பிரான்ஸ் மார்சில் ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
மார்சில் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடந்த கால் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும் கிரீஸ் வீரருமான ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் 7-க்கு 6, 4-க்கு 6, 2-க்கு 6 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் இளம் வீரர் ஹூக்ஸ் ஹெர்பட்டிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து தொடரை விட்டு வெளியேறினார்.
மற்ற கால் இறுதி ஆட்டங்களில் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீரர் டேனில் மெட்விடேவ் இத்தாலி இளம் வீரர் ஜன்னிக் சின்னரை 6-க்கு 2, 6-க்கு 4 என்ற செட் கணக்கிலும், மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய இளம் வீரர் மேத்யூ எப்டென் முன்னாள் சாம்பியனான ரஷ்ய வீரர் கேரன் கச்சானாவை 4-க்கு 6, 6-க்கு 4, 6-க்கு 2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.