மேற்கிந்தியத் தீவுகளுடனான முதல் ஒருநாள் போட்டியில் பீல்டிங்குக்கு இடையூறு செய்ததாகக் கூறி இலங்கை அணியின் பேட்ஸ்மேன் தனுஸ்கா குணதிலக அவுட் என நடுவர் அறிவித்தார்.
நார்த் சவுண்டில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி பேட்டிங்கில் 22ஆவது ஓவரில் கியரான் பொல்லார்டு பந்து வீசியபோது அதைத் தடுத்த இலங்கை வீரர், தனுஸ்கா குணதிலக முதலில் எதிர்ப்புறத்துக்கு ஓட முயன்றார்.
பின்னர் இருபுறமும் ஓடாமல் பந்துக்கு அருகிலேயே நின்றுகொண்டு அதை எடுப்பதற்கு இடையூறாக நின்றார்.
இது குறித்த முறையீட்டை அடுத்துக் காட்சிப் பதிவில் பார்த்ததில் வேண்டுமென்றே அவ்வாறு செய்ததாக மூன்றாவது நடுவர் நிகல் குகுயிட் தீர்மானித்தார்.
இதையடுத்துக் களத்தில் நின்ற நடுவர் ஜோ வில்சன், தனுஸ்கா குணதிலக அவுட் என அறிவித்தார். இலங்கை அணி குறைவான ரன்களை எடுத்துத் தோற்றதற்கு இதுவும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.