சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தாமஸ் பாச் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இணையதளம் மூலம் நடந்த வாக்குப்பதிவில் ஒட்டுமொத்த 94 வாக்குகளுக்கு 93 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதன் மூலம் வரும் 2025-ஆம் ஆண்டு வரை தாமஸ் பாச் ஒலிம்பிக் கமிட்டி தலைவராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தாமஸ் பாச் தேர்வான நிலையில் தற்போது மீண்டும் 4 ஆண்டுகளுக்கு பதவி நீட்டிக்கப்பட்டு உள்ளது.