சர்வதேச அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியில், மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த மீனவரின் மகள் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
தந்தைக்கு உதவியாக மீன்பிடி தொழில் செய்து வந்த போபாலைச் சேர்ந்த மனிஷா என்ற பெண், கடந்த 2013 முதல் துபாக்கிச்சுடும் பயிற்சி எடுத்து வந்துள்ளார்.
இதுவரை 12 சர்வதேச பதக்கங்களை மனிஷா வென்றுள்ளார். இந்த நிலையில், எகிப்து தலைநகர் கெய்ரோ-வில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியா சார்பில் மனிஷா, ராஜேஸ்வரி, கீர்த்தி ஆகிய மூவரும் பங்கேற்றனர்.
175 புள்ளிகளுக்கு அதிகபட்சமாக 158 புள்ளிகள் எடுத்து இந்தியாவை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்ற மனிஷா, வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.