இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு முந்நூறு ரன்களைக் குவித்துள்ளது.
சென்னையில் நடைபெறும் இரண்டாவது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ரோகித் சர்மா 161 ரன்களில் ஆட்டமிழந்தார். அஜிங்கியா ரகானே 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முதல் நாள் ஆட்டநேர இறுதியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு முந்நூறு ரன்கள் எடுத்துள்ளது. ரிசப் பந்த் 33 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.