ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் செரீனா வில்லியம்ஸ் ஜெர்மனியின் லாரா சிஜ்முன்டை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் , பிரான்ஸ் வீரர் ஜெர்மி சார்டியை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் சாம்பியன் டொமினிக் திம் , கஜகஸ்தான் வீரர் மிகைல் குகுஷ்கினை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.