கிரிக்கெட் போட்டிகளின் போது நேரலை படப்பிடிப்புக்காக டிரோனை பயன்படுத்த பிசிசிஐக்கு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை டிரோன்களை பயன்படுத்த விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்திடமும் உரிய அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரிமோட் மூலம் டிரோன்களை இயக்குவதற்கு, பயிற்சி பெற்ற நபர்களையே பயன்படுத்த வேண்டும், தனிநபர்களுக்கோ, சொத்துக்களுக்கோ ஆபத்து ஏற்படக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.