இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 13 முதல் 17 வரை நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியைக் காணப் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி 2வது டெஸ்ட் போட்டியைக் காணப் பார்வையாளர்களுக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தொடங்கும் டிக்கெட் விற்பனையில் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பேடிஎம், இன்சைடர் இந்த இரு செயலிகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.