இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு விராட் கோலியே கேப்டனாக இருப்பார் என்றும், தான் அவரது துணை கேப்டனாக இருக்கவே விரும்புவதாகவும் இந்திய கிரிக்கெட் வீரர் ரஹேனே தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ரஹானே தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இதன் காரணமாக ரஹானேவின் கேப்டன்ஷிப்பை பலதரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இதனிடையே இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலும் துணை கேட்பனாக தேர்வாகியுள்ளது குறித்து பேசிய ரஹானே, விராட் கோலி இல்லாத நேரத்தில் இந்திய அணியை வழிநடத்தி சிறந்த கேப்டன்ஷிப்பை வெளிப்படுத்துவது தனது கடமையாகும் என கூறினார்.