செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
விளையாட்டு

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை

Jan 19, 2021 04:20:00 PM

பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா சாதனை படைத்துள்ளது.

பிரிஸ்பேனில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 369 ரன்கள் குவித்தது, பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன்கள் சேர்த்தது. 33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 294 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணிக்கு 328 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்தியா 1.5 ஓவரில் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையல், இன்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் ஸ்கோர் 18 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா 21 பந்தில் 7 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய புஜாரா ஒரு பக்கம் நிலைத்து நிற்க மறுபக்கம் ஷுப்மான் கில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ரன்கள் விளாசினார்.

91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷுப்மான் கில் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினார். புஜாரா தனது பங்கிற்கு அரை சதம் விளாசினார்.

அறிமுக வீரரான வாஷிங்டன் சுந்தர் 29 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். கடைசி 4 ஓவர்களில் 10 ரன்கள் தேவை என்று இருந்த நிலையில், இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடி கடைசி வரை களத்தில் இருந்த ரிஷப் பந்த் 89 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

பிரிஸ்பேன் வெற்றி மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியதுடன் பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் வென்றது.

ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அணியின் வெற்றியால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியின் ஆர்வமும், உத்வேகமும் நன்கு புலப்பட்டதாக கூறியுள்ள பிரதமர், இனி விளையாட இருக்கும் போட்டிகளிலும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், பல நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளதாக வாழ்த்தியுள்ளார். அதில் 3 தமிழக வீரர்களின் சிறப்பான பங்களிப்பும் பெரும் மகிழ்ச்சியை தருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அற்புதமான டெஸ்ட் தொடர் வெற்றியை ஆஸ்திரேலியாவில் பெற்றிருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இந்த வெற்றி எப்போதும் நினைவு கூறப்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை படைத்த இந்திய அணிக்கு 5 கோடி ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


Advertisement
சென்னை திரும்பிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்.. ஓய்வை அறிவித்த பின் தாயகம் வந்த அஸ்வினுக்கு உற்சாக வரவேற்பு..
இரண்டு நாள்களாக நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் 182 வீரர்கள் எடுக்கப்பட்டனர்
ஐ.பி.எல். ஏலத்தை இரு நாட்களாக நடத்தி முடித்த மல்லிகா சாகரின் செயலுக்கு வந்துள்ள பாராட்டுகளும், விமர்சனங்களும்....!
ரூபிக் கியூப் விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு
2025 ஐ.பி.எல். தொடரில் தோனி விளையாடுவாரா? - சி.எஸ்.கே. சி.இ.ஓ. விளக்கம்
தேசிய அளவிலான கோ-கோ போட்டி 12 மாநிலங்களைச் சேர்ந்த கோ-கோ அணிகள் பங்கேற்பு..
சென்னையில் நடைபெறுகிறது 'சைக்ளோத்தான் - 2024' போட்டி.. கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்..
சிவகாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி.. திண்டுக்கல் அணியை வீழ்த்தி தமிழக காவல்துறை அணி வெற்றி
அமெரிக்க கோப்பைக்கான பாய்மர படகுப் போட்டியின் தகுதிச் சுற்று.. பிரிட்டன் மற்றும் இத்தாலி அணிகள் கடுமையாக மோதல்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள், பெண்கள் அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement