பிரிஸ்பேன் கிரிக்கெட் டெஸ்டில் இந்திய அணி வெற்றிபெற 328 ரன்கள் எடுக்க வேண்டும் என ஆஸ்திரேலியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்களும், இந்திய அணி 336 ரன்களும் எடுத்தன. நான்காம் நாளான இன்று இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்கள் ஓரளவுக்கு ரன்களைச் சேர்த்த நிலையில் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலிய அணி 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக ஸ்டீவன் சுமித் 55 ரன்களும், டேவிட் வார்னர் 48 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளையும், ஷ்ரதுல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 328 ரன்கள் எடுத்தால் போட்டியை வெல்வதுடன் தொடரையும் கைப்பற்றி விடும். இந்நிலையில் இந்திய அணி 4 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டது. ஒரு நாள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி வெல்ல மேலும் 324 ரன்கள் எடுக்க வேண்டும்.