தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவை சேர்ந்த சாய்னா நேவால், எச்.எஸ் பிரணாய் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் வைரஸ் தொற்று உறுதியானது.
அதே போன்று ஜெர்மனியை சேர்ந்த ஜோன்ஸ் ரால்பி ஜேன்சன் என்பவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இது தொடர்பாக உலக பேட்மின்டன் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், அவர்கள் மூவருக்கும் பிசிஆர் பரிசோதனையில் கொரோனா உறுதியான போதும் ரத்தத்தில் எதிர்ப்பு சக்தி பரிசோதனை நடத்தப்பட்டதில் பாசிட்டிவ் என முடிவு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர்கள் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம், தற்போது பாதிப்புடன் இருப்பதாக அர்த்தம் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டு விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.