இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி பிரிஸ்பேனில் தான் நடைபெறும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக குவின்ஸ்லாந்து மாகாணத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், பிரிஸ்பேன் மைதானத்தில் விளையாட இந்திய அணி தயக்கம் காட்டி வந்தது. மேலும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறும் சிட்னி மைதானத்திலேயே 4-வது போட்டியையும் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில் திட்டமிட்டபடி பிரிஸ்பேன் மைதானத்தில் தான் 4-வது டெஸ் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய இடைக்கால தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லே தெரிவித்துள்ளார்.